அறிவிப்பு



ஹாய் பேபிஸ் எல்லோரும் எப்படி இருக்கீங்க💕💕

தீபஷ்வினியின் 

#உயிராக_வா_பூந்தென்றலே” 


என்ற புத்தம் புதிய நாவல் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்💕💕


இந்த நாவல் இணையத்தில் வராத  #நேரடி #புத்தகம் எப்பொழும் போல் உங்கள் ஆதரவை இந்த நாவலுக்கும் கொடுப்பீங்கனு நம்புறோம்💕💕


புத்தகம் ஆன்லைனில் வாங்க நினைப்பவர்கள்

👇

பிரியா நிலையம் -  09444462284

அருண் பதிப்பகம் - 09003145749


என்றும் அன்புடன்

உங்கள்

தீபஷ்வினி💕💕

#சாய்_விருட்சம்_பதிப்பகம்


******


“உயிராக_வா_பூந்தென்றலே”

கதையில் இருந்து உங்களுக்காக குட்டி டீ…



தன் உடலில் உள்ள சக்தியெல்லாம் தன்னை விட்டு போனது போன்ற உணர்வுடன் கால்கள் தள்ளாட பிறந்து சில நாட்களே ஆன குழந்தையுடன் அந்த ஐ.சி.யுனுள்ளே  நுழைந்தாள் அவள். 


அங்கே கட்டிலில் உடல் முழுக்க மருத்துவ உபகரணங்கள் கொண்டு தனன உதிரத்தால் உயிர்த்த உயிரை காண தனது உயிரை இழுத்து பிடித்து கொண்டு படுத்திருந்தான் அவன்.  அவனது நெஞ்சுக்கூடு ஏறி இறங்கியதில்  அவன் இன்னமும் உயிரோடு இருக்கின்றான் என அவளுக்கு எடுத்துரைக்க. 


தந்தை தன் முகத்தை காணும் முன்பே இவ்வுலகத்தை விட்டு செல்ல போகிறான் என்று புரிந்ததோ என்னவோ வீரீட்டு அழுதது  அவள் கையில் இருந்த அக்குழந்தை.


எதற்காக உயிரை கையில் பிடித்து கொண்டு இவ்வளவு நேரம் காத்திருந்தானோ அவனது செவியில் குழந்தையின் அழுகுரல் விழவும் மிகவும் கஷ்டப்பட்டு கண்களின் இமைகளை பிரித்து பார்த்தான். 


அங்கே தளர்ந்த கொடியாய் கையில் குழந்தையுடன்   நின்று  கொண்டிருந்தவளை  பார்த்தவன் கண்களால் தன் அருகே வருமாரு அழைத்தான்.


அதில் வேகமாக அவன் அருகில் வந்து நின்றவளோ "உ.உங்க குழந்தை" என்று கண்ணில் கண்ணீர் வழிய அவன் முகத்திற்கு நேராக காட்டினாள் அவள்.


உயிர் பிரிய போகும் நிலையில் கூட தன் குழந்தையை பார்த்ததும் அவன் கண்ணில் தான் எவ்வளவு பிரகாசம். ஆசை தீர தன் மகவை கண்டவன். பின்பு


அவளை பார்த்து "எ.என்.என்னை மன்.மன்னிச்சுருமா எங்க குழந்தையை உ.உனக்கு  பா..பாரமாக்கிட்டு போறேன்மா.  கு.குழந்தை ப..த்திரம்." என்று கஷ்டப்பட்டு வார்த்தைகளை உச்சரித்து விட்டு வேக வேகமாக மூச்சு விட்டவனின் மூச்சு காற்று அடுத்த நொடி ஏற்கனவே காற்றில் கலந்திருந்த அவனது காதல் மனைவியிடம் போய் சேர்ந்து கொண்டது..


*****


லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இந்தியா செல்ல வேண்டிய விமானத்தின் அழைப்புக்காகக் காத்திருந்தான் அவன்


அவன் விழிகளோ தன் கையில் இருந்த கைபேசியின் தொடுதிரையில் 'ஒரு கையால் அவனது கழுத்தை இறுக கட்டி கொண்டு மற்றொரு கையால் அவனது அடர்ந்த தலைமுடியல களைத்து விட்டு அழகாகச் சிரித்துக் கொண்டிருந்த பெண்ணையே பார்த்தபடி இருந்தது.


அவனது இதழோ "நாச்சி எங்க போனே. இப்படி யாருக்குமே தெரியாம காணாம போறதுக்குத் தான் என்னை வற்புறுத்தி இங்க அனுப்பி வச்சியா?” என்று அவளிடம் கேட்டது.


அதற்குப் பதில் சொல்ல அவள் தான் அவனது அருகில் இல்லையே. அவன் மனமோ "உன்னைத் தேடி நானே வர போறேன் நாச்சி. அதுக்கு அப்புறம் நீ என்ன சொன்னாலும் உன்னை இங்க என்னோடவே கூட்டிட்டு வந்துருவேன்." என்று மனதில் பேசிக்கொண்டு இருக்க. அப்பொழுது அவனது மனநிலையைக் களைப்பது போல் அவன் கையில் இருந்த மொபைல் ஒலி எழுப்பியது. உடனே அட்டென் செய்து காதுக்குக் கொடுத்தவன்


"சொல்லு அஷ்வின் நாச்சி பத்தி ஏதாவது தகவல் தெரிஞ்சிதா" என்று வெற்றுக் குரலில் கேட்டான்.


"எஸ் அபி, நான் திருநெல்வேலிக்கு என் பிரென்டை பார்க்க போயிருந்தேன். அங்கே ஒரு துணிக்கடையில, நாச்சி மாதிரியே ஒரு லேடியை பார்த்தேன்." என்று கூறவும்


"அஷ்வின் நிஜமா தான் சொல்றியா அது நாச்சி தானா?" என்று கேட்டவனிடம் ஒருவித பரபரப்பு வந்து ஒட்டி கொண்டது.


"ஆமாடா அது நாச்சி தான்னு அடிச்சு சொல்லுவேன்" என்று கூறவும்


"அந்த கடை பேர் சொல்லுடா நான் நேரே போய் விசாரிச்சுக்கிறேன்" என்று பரபரத்தான் அபி


"நான் அவசரமா கிளம்பிதுல கடை பேர் சரியா கவனிக்கல அபி. பட் கேட்டு சொல்றேன். நீ கவலை படாதே மச்சான் நாச்சியை எப்படியாவது சீக்கிரம் கண்டு பிடிச்சுடலாம்." என்றுவிட்டு வைத்தான் அஷ்வின். 


"தேங் காட்." என்று கடவுளுக்கு நன்றி சொன்னவனோ தான்  ஏற வேண்டிய விமானத்தில் இருந்து அழைப்பு வரவும் தனது நாச்சியை நேரில் காண போகும் சந்தோஷத்தில் விமானத்தில் ஏறி அமர்ந்தான் அபி என்ற அபிஷேக்.


****


விசிட்டர் அறையில் போடப்பட்ட இருக்கையில் அமர்ந்து தன் இரு கைகளையும் மடக்கி காலில் வைத்துக் கொண்டு உள்ளங்கையில் தன் கன்னங்களைத் தாங்கியபடி கண்களை மட்டும் சுற்றி சுழற்றி அங்கும் இங்கும் பார்த்து கொண்டிருந்தாள் குந்தவி.


அவளை அப்படிப் பார்க்க அவனுக்குச் சிரிப்பு வர அவளை நோக்கி நடந்து வந்தான் குரு.


யாரோ வரும் அரவம் கேட்டு சட்டென்று திரும்பிய குந்தவி குருவை பார்த்ததும் புன்னகை முகமாகத் துள்ளி எழுந்து நின்றவள் "குரு." என்று அழைக்கப் போனாள்.


அதற்குள் அதே அறையில் இன்னொரு இருக்கையில் அமர்ந்திருந்த அழகான பெண் ஒருத்தி "ஹெலோ சார்.. நான் இங்கே இருக்கேன்." என்று கூறி குருவை பார்த்து அழகாகச் சிரித்தாள்


'யார் அது' என்று குரல் வந்த திசையைக் குந்தவி திரும்பி பார்க்க..


குருவோ குந்தவியை மறந்து "தேவிமா!!! எப்போ வந்தே ஒரு போன் பண்ணி இருந்தா நானே உன்னைப் பார்க்க வந்துருப்பேன்ல." என்றவன் தன் வலது கையை அவளை நோக்கி நீட்டினான்.


அவளும் குருவின் அருகே சென்று அவனது தோளில் சாய்ந்து கொள்ள அவளை தன் தோளோடு அனைத்துக் கொண்டான் அவன்.


அந்தப் பெண்ணோ "ஹாஸ்டல்ல அடைஞ்சி கிடந்தது ரொம்பப் போர் அடிச்சிது அதான் வார்டன் கிட்ட உங்களைப் பார்க்க போறேனனு சொல்லி பெர்மிஷன் கேட்டுட்டு வந்தேன். வெளியே போலாமா." என்று அவனிடம் கேட்டாள்.


"ம்ம்ம் போலாம் தேவிமா." என்ற குரு அப்பொழுது தான் ஞாபகம் வந்தவனாக அங்கே நின்றிருந்த குந்தவியைப் பார்த்தான்.


அவளும் முகம் சுருங்க அவனையே தான் பார்த்து கொண்டிருந்தாள்.


"தேவிமா உன்கிட்ட ஒரு அருந்தவாலு பத்தி சொல்லி இருக்கேன்ல, இதோ இந்த மேடம் தான்." என்று குந்தவியை அறிமுகம் செய்து வைத்தான் குரு.


"யாரு?" எனச் சிறிது யோசித்தவள் "எஸ் எஸ் ஒரு வளர்ந்த குழந்தை ஒன்னு உன்கிட்ட பாடம் படிக்கிதுன்னு சொன்னியே அந்தப் பொண்ணா." என்று கேட்டவள் குந்தவியைப் பார்த்து அழகாகச் சிரித்து "ஹாய் பேபி எப்படி இருக்கீங்க, உங்க ஸ்டடிஸ் எப்படிப் போகுது." என்று கேட்டாள் அவள்


பேபி என்று குறிப்பிட்டுத் தன்னை அழைத்ததும் குந்தவிக்குக் கோபம் வர "நான் ஒன்னும் யு.கே.ஜி படிக்கிற பேபி இல்ல. காலேஜ் படிக்கிறேன். எனக்குப் பதினேழு வயசு முடிஞ்சி மூணு மாசம் ஆகுது, நானும் பெரிய பொண்ணு தான்." என்றுவிட்டு குருவை முறைத்தவள் "நான் போறேன்." எனத் தன் குட்டை முடியை சிலுப்பிக் கொண்டு சட்டென்று அங்கிருந்து வெளியேறி இருந்தாள்.


"ஏய் குந்தவி நில்லு எதுக்கு வந்தே அதைச் சொல்லாம போறே." என்று சத்தம் கொடுத்தான் குரு. ஆனால் அவளோ அவனது சத்தம் கேட்டும் கேட்காதது போல் அவனைத் திரும்பியும் பாராமல் சென்று விட்டாள்.


"சோ கியூட், நிஜமாவே இந்தப் பொண்ணு வளர்ந்த குழந்தைதான்." என்றாள் தேவி.



*****


No comments:

Post a Comment