ஸ்வரம் 41

 



ஸ்வரம் 41


ரிஷிவர்மன் பெண்களை அறியாதவன் இல்லை தான்! ஆனால் எந்தப் பெண்ணையும் தன் விரல் நுனி கொண்டு தீண்டியதும் இல்லை. அவனை நெருங்க நினைக்கும் பெண்களை கூட, 'எட்டி நில்!' என்று அவனின் தீர்க்கமான பார்வையால் கடுமையாக எச்சரித்து, விலக்கி வைப்பான். 


அப்படிப்பட்டவன், முதன் முதலாகத் தொட்டுத் தூக்கியது மற்றும் சற்று முன்பு முத்தம் கொடுத்தது எல்லாம் அவன் தாலி கட்டிய மனைவியை மட்டுமே! அதுவும் கூடச் சூழ்நிலையால் தானே தவிர, மற்றபடி அவள் மீது ஆசையா அல்லது காதலா என்று கேட்டால் நிச்சயம் அவனிடம் பதில் இல்லை.


ஆனால் இப்பொழுது ஸ்னேகாவை அப்படி ஒரு கோலத்தில் பார்ப்போம் என்று கனவிலும் அவன் எண்ணவில்லை. அவனும் ஆண் மகன் தானே? அழகு புயலாக அவன் முன்னால் அவனது மனைவியாக இருப்பவளைப் பார்த்ததும், சற்றுத் தடுமாறித்தான் போனான். எவ்வளவு நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தானோ?


சட்டென்று தலையைக் குலுக்கித் தன்னிலைக்கு மீண்டு கொண்ட ரிஷிவர்மன், ஒருமுறை தன் கண்களை மூடித் திறந்து தன்னை சமன் படுத்திக் கொண்டவன், ஸ்னேகாவை நெருங்கி, கட்டிலில் கிடந்த ஒரு போர்வையை எடுத்து அவள் மீது போர்த்தி விட்டான்.


ஸ்னேகாவோ, தன் மீது ஏதோ விழுவது உணர்ந்து, வேகமாகப் போர்வையைப் பிடித்து இழுத்துக் கீழே வீசி விட்டாள்


அதில் கடுப்பான ரிஷியோ, "ஏய்! என்னடி பண்றே?" என்று கோபமாகக் கேட்க,


அதற்கு, "ம்ம்ம்.." என்று முனகினாளே தவிர, என்னவென்று அவனிடம் கேட்கவில்லை. அப்படி கேட்கும் நிலையில் தான் அவள் இல்லையே!


"ம்பச்.." என்று சலித்துக் கொண்டவாறு, தனது பேக்கில் இருந்து தன்னுடைய சட்டை ஒன்றை எடுத்து மீண்டும் அவள் அருகில் வந்தவன், 


"ஏய் எந்திரிடி! இந்தச் சட்டையைப் போட்டுக்கோ!" என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவள் மீது வீசினான். 


தன் மீது வந்து விழுந்த அவனது உடையை எடுத்துப் பார்த்த ஸ்னேகா, தலையை மட்டும் தூக்கி, "எனக்குப் போட தெரியாதே? நீயே போட்டு விடு!" என்று போதையில் சிரித்தபடி கூறி விட்டு, ஒரு பக்கமாகச் சரிந்து படுத்து அவனைச் சோதித்து வைத்தாள். 


அவள் படுத்திருந்த நிலையைப் பார்த்து ரிஷியின் பாடு தான் மேலும் திண்டாட்டமாகிப் போனது. ஆம்! மேலாடை இல்லாமல் வெறும் உள்ளாடையுடன் கட்டிலில் உருண்டு கொண்டு இருப்பவளைப் பார்க்க பார்க்க, அவனது உடலில் என்னவோ மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்க, தன் விரல் கொண்டு நெற்றியை நீவி கொண்டவன்,


"சரியான இம்சைடி! எனக்குன்னு வந்து வாச்சிருக்க பாரு.." என்று வாய் விட்டுப் புலம்பியவன், அவளுக்குச் சட்டையைப் போட்டு விடும் முடிவில், கட்டிலில் அவள் அருகில் அமர்ந்தான் ரிஷிவர்மன்.  


கட்டில் முழுக்க உருண்டு கொண்டிருந்த ஸ்னேகாவோ, தன் அருகில் அமர்ந்த கணவனைப் பார்த்தவள், உருண்டு வந்து அவன் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள்.


அவளின் இந்தச் செயலில், "நான் எங்க அம்மா மடியில படுத்ததை விட, எங்க அத்து மடியில படுத்த நாள் தான் அதிகம்.." என்று சற்று முன் அவள் கூறியது அவனது நினைவில் வந்தது. அதில் அவனையும் அறியாமல் அவனது கை மனைவியின் தலையை வருட போனது. பின்பு அதைச் செய்யாமல் சட்டென்று தனது கையை இழுத்துக் கொண்டவன்,


தனது சட்டையை அவளுக்கு அணிவிப்பதற்காக, ஸ்னேகாவின் முதுகின் கீழே கைக் கொடுத்து அவளை எழுப்பி உட்கார வைத்தான்.


ஆனால் அவளோ நேராக உட்காராமல் தொப்பென்று கட்டிலில் படுத்து விட்டாள். அதில் அவளை முறைத்தவன், மீண்டும் அவளை எழுப்பி உட்கார வைக்க, ஸ்னேகாவோ மறுபடியும் முன்பு போல் படுத்துக் கொண்டாள். அப்படிச் செய்வது அவளுக்கு விளையாட்டு போல் இருந்ததோ என்னவோ? இரண்டு மூன்று முறை அவள் அவ்வாறே செய்து கொண்டிருந்தாள்.


அதில் தனது பொறுமையை இழந்த ரிஷியோ, இந்த தடவை அவளை எழுப்பி உட்கார வைத்தது மட்டும் இல்லாமல், அவள் படுத்து விடாமல் இருக்க தன் நெஞ்சில் அவளைச் சாய்த்துக் கொண்டான். ஸ்னேகாவோ, கணவனின் நெஞ்சத்தில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டது மட்டும் அல்லாமல், அவனின் முதுகைச் சுற்றி இரு கைகளையும் கோர்த்து அவனை இறுக கட்டிக் கொண்டாள்.


அவளது செயலில் ஒரு நிமிடம் அவனது உடல் சிலிர்த்து பின்பு இறுகியது. அது ஒரு நொடி தான்! அடுத்த நொடி, அவளைத் தன்னிடம் இருந்து விலக்க முயற்சித்தான். பூவை போல் மென்மையாக இருந்தவளை, வேங்கையவன் தன் ஒற்றை விரல் கொண்டு கூட விலக்கி இருக்க முடியும். ஆனால் ஏதோ பலமே இல்லாதவன் போல், அவளது வெற்று தோளில் கைப் பதித்து அவளைத் தள்ளி விட முயற்சித்தான்.


அவளோ அவனிடம் இருந்து விலகும் எண்ணமே இல்லாதவள் போல் மேலும் அவனுள் புதைந்து, அவனது இதயத்தின் உள்ளே நுழைந்து கொள்ள நினைத்தாளோ என்னவோ, இன்னும் இன்னும் கணவனை இறுக கட்டிக் கொண்டாள்.


செய்வதறியாது அவளைப் பார்த்த ரிஷிவர்மனின் தேகம் பெண்ணவளின் மென்மையில் கிறங்கித்தான் போனது.


அப்பொழுது நேரம் காலம் இல்லாமல் திடீரென அவன் மனசாட்சி வெளிவந்து, "ரிஷி! எந்த உரிமையில அவளை இப்படிப் பார்க்கிறே?" என்று கோபமுடன் கேள்வி எழுப்பியது.


"ஏன்? என் மனைவி என்ற உரிமை போதாதா?" என்று சற்றும் தாமதிக்காமல் மறுகேள்வி கேட்டான் ரிஷிவர்மன்.


"என்னது மனைவியா? இவளா? அது இப்ப தான் உனக்குத் தெரியுதா? ஏன் இதுக்கு முன்னாடி இவளை என்ன பாடு படுத்தினே? டிவோர்ஸ் பேப்பர் எல்லாம் நீட்டினே. இவ வேணாம்னு விட்டுட்டு வந்தே.. அதெல்லாம் மறந்து போச்சா? ஓஹ்! போதையில அவ மனசுல உள்ளது எல்லாம் சொல்லவும் லவ்வு ஏதும் வந்துருச்சோ?" என்று கேலியுடன் கேட்க,


"ஏன் வரக் கூடாதா?" என்று தான் கேட்டான் ரிஷிவர்மன். ஆம்! அவனுக்கு அவளது குறையை நினைத்து முன்பு அவளைப் பிடிக்காமல் இருந்தது தான்! ஏன் இப்பொழுதும், அந்தக் குறை அவளிடம் இருக்கிறதுதான், அதை அவன் மறுக்கவில்லை. 


ஆனால் அதையும் மீறி, அவள் தன் மனதில் இருந்ததை எல்லாம் கூறியதைக் கேட்க கேட்க, தனக்காக, தன்னை மட்டுமே நேசிக்க ஒரு ஜீவன் இருக்கிறது என்று தெரியவும், அவன் மனதில் வெகு வருடங்கள் கழித்துச் சாரல் அடித்தது தான் உண்மை! தாய்-தந்தை இருந்தும், விபரம் அறிந்த வயதில் இருந்து யாரும் இல்லாமல் அநாதை போல் வாழ்ந்தவனை, அவனுக்கே தெரியாமல், அவனை இந்த அளவுக்கு ஒருத்தி நேசித்து இருக்கிறாளே? அதுவே ரிஷிவர்மனுக்கு ஒருவிதமான சுகத்தைக் கொடுத்தது. காதலில், காதலிப்பதை விட காதலிக்கப் படுவதும் ஒருவகை சுகம் தானே!


அவனையும் அறியாமல் அவனது கைகள் ஸ்னேகாவை கட்டிக் கொண்டது. ஆம்! இத்தனை வருடங்களாக இரும்பை கரைத்து குடித்தவன் போல் கடினமாக வைத்திருந்த அவனது இதயத்தை, பெண்ணவள் தன் பூங்கரம் கொண்டு தொட்டுத் தடவி, கொஞ்சம் கொஞ்சமாக மென்மையாக்கி இருந்தாள்.


தன் மார்பில் முகம் புதைத்து இருந்த மங்கையின் வதனத்தைத் தன் கரம் கொண்டு நிமிர்த்தினான் ரிஷிவர்மன். தேவதையவளோ, கொள்ளை அழகுடன் இருந்தாள். பிறை நெற்றி, அதில் பாதி நிலவை ஒட்ட வைத்தது போல் இரு புருவங்கள், மூடி இருக்கும் அழகிய நயனங்கள், அதைப் பாதுகாப்பது போல் இருந்த இமைகள், பட்டு போன்ற மிருதுவான கன்னங்கள் அவனைச் சுண்டி இழுக்க, இறுதியாகச் சிறிது திறந்திருந்த அவளது ஆதரங்கள் மீது அவனது பார்வை படிந்தது. ஆல்கஹால் அருந்தாமலேயே போதை ஏறுமா? இதோ! அவனுக்குப் போதையை ஏற்றிக் கொண்டிருக்கிறாளே அவனவள்? அவளைப் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு! அவளை அணுஅணுவாய் ரசித்துக் கொண்டிருந்தவனால் அதற்கு மேல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், அவளது இதழைத் தன் இதழுக்குச் சிறிது நேரம் கடன் வாங்கிக் கொண்டான், அவளிடம் அனுமதி பெறாமலேயே! 


மென்மையாக ஆரம்பித்த அவனது இதழ் முத்தம், பெண்ணவளின் இதழில் சுரக்கும் அமிர்த சுவையில் தன்னைத் தொலைத்து, சிறிது சிறிதாக வன்மையாக மாறிக் கொண்டிருந்தது. 'அவளது இதழ் ரசம் மட்டுமே போதும் வாழ்நாள் முழுவதும் தனது பசியாற' என்பது போல் அவளின் இதழை மென்று தின்ன ஆரம்பித்தான். பாவம்! பாவையவள் தான் மூச்சுக்காக சற்றுத் திணறி போனாள். அதை அவன் அறிந்தாலும், அவளை விட்டு விலகாமல், தனது சுவாசதை அவளுக்குக் கடன் கொடுத்து, அவளிடம் இருந்து வட்டியாக அள்ள அள்ள குறையாத அமிர்தத்தை வாங்கிக் கொண்டிருந்தான்.


வெகுநேரம் நீடித்த இதழ் யுத்தத்தை முடிக்க மனம் இல்லாமல் முடித்து வைத்த ரிஷிவர்மன், மீண்டும் அவளது மதி முகத்தைப் பார்த்தான். அவன் கொடுத்த முத்தத்தால் தடித்துச் சிவந்திருந்த அவளது இதழை பார்த்தவனுக்குச் சிரிப்பு வர, இப்பொழுது அதில் மென்மையாக இதழை ஒற்றியவன், அவளை அப்படியே ஒரு குழந்தை போல் கட்டிலில் படுக்க வைத்தான். அவளோ இன்னும் அவனைக் கட்டிக் கொண்டு தான் இருந்தாள். அதை உணர்ந்து அவனுக்கு மேலும் சிரிப்பு வந்தது.


தன் மேனியில் இருந்த அவளது கையை விலக்கி விட்டு அவள் நெற்றியில் இதழ் பதித்தவன், அவள் அருகில் இருந்து எழ போனான். ஆனால் அவனால் அது முடியவில்லை! காரணம், மறுபடியும் அவனின் இடையோடு கட்டிக் கொண்டு இருந்தாள் ஸ்னேகா. அவளின் செயலில் புருவம் உயர அவளைப் பார்த்தான் ரிஷிவர்மன். இன்னமும் அவள் இமை மூடி தான் இருந்தது. 


"ஸ்னேகா.." என்று முதன் முதலாக அவளது பெயரைச் சொல்லி அழைத்தான் அவன். சிறு வயதில் அவளை "பாப்பா" என்று மட்டும் தானே அழைப்பான்!


கணவனின் அழைப்பில் கண் திறவாமல், "ம்ம்ம்" என்று மட்டுமே கூறினாள் ஸ்னேகா. அவள் குரலில் இருந்த வித்தியாசத்தை அவன் உணராமல்,


"நீ நிதானத்தில இல்லடி! இப்ப தூங்கு, காலையில் பேசிக்கலாம்.." என்றான். அவனுக்கும் அவளின் அருகாமை ஏதேதோ செய்து கொண்டு தான் இருக்கிறது. 'அவள் உன் மனைவி, அவளை மொத்தமாக எடுத்துக் கொள்!' என்று அவனது உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் அவனிடம் யாசித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், மனைவியே ஆனாலும், அவள் தன்னிலை மறந்து இருக்கும் இந்த வேளையில், அவளை எடுத்துக் கொள்வது தவறு என்று உணர்ந்தான் ரிஷிவர்மன்.


மேலும் அவள் மனதில் உள்ளதை அவள் அறியாமல் தன்னிடம் கூறி விட்டது போல், தானும் தன் மனதை, அவள் சுயநினைவில் இருக்கும் போது சொல்ல வேண்டும். அதன் பிறகு அவள் தன்னைப் புரிந்து கொண்டு, தன்னுடன் சேர்ந்து மனதார வாழ வேண்டும். அந்த வாழ்க்கைதான் தங்களுக்குள் நல்ல புரிதலையும், சந்தோஷத்தையும் தரும் என்று நினைத்தவன், அவளைத் தன்னிடம் இருந்து விலக்கி விட்டு எழுந்து கொள்ள போனான்.


அவன் தன்னை விட்டு விலகுவதை உணர்ந்து, அவனது இடையைக் கட்டிக் கொண்டிருந்த தனது கையை எடுத்து கணவனின் கழுத்தில் மாலையாக கோர்த்துக் கொண்டு, அவனைத் தன் முகம் நோக்கி இழுத்த ஸ்னேகா, "அத்து! ஐ லவ் யு!" என்றவள், அவனது இதழில் முத்தத்தைப் பதித்தாள்.


அவள் காதல் சொன்ன அழகில் மயங்கியவன், "சொன்னா கேளுடி… நானும் எவ்ளோதான் என்னை கண்ட்ரோல் பண்றது? முடியலடி!" என்றான் கரகரப்பான குரலில்.


அவளோ, அவன் பேச்சைக் காதில் வாங்காமல் மீண்டும் மீண்டும் கணவனது இதழில் முத்தத்தைப் பதித்துக் கொண்டு இருக்க, இதற்கு மேலும் அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியுமா என்ன? சற்று முன் எடுத்த உறுதியெல்லாம் காற்றில் கரைந்து போக, அடுத்த நொடி, அவள் கொடுத்த முத்தத்தை தனதாக்கிக் கொண்டான் ரிஷிவர்மன். அங்கே மீண்டும் ஒரு முத்த யுத்தம் ஆரம்பம் ஆனது. கணவனது ஆவேச முத்தத்தைத் தாள முடியாமல், தன் கைகளின் நக கண்களை அவனது வெற்று தோளில் அழுத்திப் பதித்தாள் ஸ்னேகா. அவனுக்கோ அது எறும்பு கடிப்பது போல் கூட இருக்கவில்லை. 


இதழின் அமிர்தத்தை சுவைத்துப் பார்த்தவனுக்கு, பெண்ணவளின் முழு தேகத்தின் சுவையும் எப்படி இருக்கும் என்று ருசித்துப் பார்க்க வேண்டும் என்ற பேராவல் எழுந்தது. இதற்கு மேலும் அவனிடம் பொறுமை இருக்கவில்லை. அவள் இதழில் இருந்து தனது இதழ் பயணத்தை நகர்த்தி, அவளது கழுத்து வளைவுக்கு வந்து அங்கே அழுத்தி முத்தமிட்டவன், அடுத்து தன் கரங்கள் மூலம் தனது தேடலை மனைவியின் மேனியில் தொடர ஆரம்பித்தான்.


கணவனின் ஒவ்வொரு தொடுகைக்கும் துடித்து தவித்துப் போனாள் மங்கையவள். அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் கையில் கிடைத்தால் மானிடன் என்ன செய்வானோ, அந்த மனநிலையில் தான் இருந்தான் ரிஷிவர்மன்.


ஒரு கட்டத்தில் முழு மூச்சாக அவளுடன் கலந்தவனுக்கு, ஒரு தடவையில் திருப்தி இல்லையோ? மீண்டும் மீண்டும் அவளிடம் எதையோ தேடிக் கொண்டே இருந்தான். அவன் தேடுதல் வேட்டை முடியும் நேரம் பொழுதும் அழகாகப் புலர்ந்திருந்தது.


ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ரிஷிவர்மனை அவனது கைப்பேசி சத்தம் போட்டு எழுப்பி விட்டது. கண்களைத் திறவாமல் கையை மட்டும் நீட்டி, கட்டிலின் அருகே டேபிளின் மீது இருந்த மொபைலை எடுத்துப் பேசி விட்டு வைத்தவன், இடது கையால் தனது அருகே படுக்கையைத் துழாவினான். அவன் கைக்கு அவனவள் அகப்படாமல் போகவும் திரும்பிப் பார்த்தான். அவன் மனைவி படுத்து இருந்த இடம் காலியாக இருந்தது.


அதில் முழுமையாகத் தூக்கம் கலைந்து வேகமாக எழுந்து அமர்ந்த ரிஷிவர்மன், சுற்றும் முற்றும் பார்த்தபடி கட்டிலில் இருந்து இறங்கி முன்னறைக்குச் சென்றான். அங்கும் அவள் இருக்கவில்லை. "எங்க போனா? ஒருவேளை ரூமுக்குப் போயிட்டாளோ?" என்று எண்ணியவனுக்கு நேற்றைய இரவு நினைவுக்கு வந்தது. அதில் அவனது இதழில் மந்தகாச புன்னகை தோன்ற பால்கனியில் சென்று நின்றவன், தனது தலையை இரு கைகளால் அழுந்த கோதிக் கொண்டான். அவனை நினைத்து அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. பின்னே! ‘எப்படி இருந்தவனை ஒரே நாளில் இப்படி மாற்றி விட்டாளே ராட்சசி!’ என்று தன்னவளை ரசித்துத் திட்டினான். 


அவனவளின் வாசம் இன்னமும் அவன் மேனியில் சுகந்தத்தைப் பரப்பிக் கொண்டு இருக்க, அவள் மீண்டும் வேண்டும் என்று அவனது மனம் ஏங்க ஆரம்பித்தது. 'இப்பொழுதே அவளைத் தேடி செல்!: என்று அவன் மனம் உத்தரவு பிறப்பிக்கவும், 'இல்லை! நேற்று போல் அவசரப்படக் கூடாது! முதலில் அவளிடம் தன் மனதில் உள்ளதைப் பேசி விட வேண்டும்" என்று எண்ணிய ரிஷிவர்மன் அறியவில்லை, அது அத்தனை சுலபம் இல்லை என்பதை!


குளித்து முடித்து மனைவியைத் தேடி அவள் தங்கி இருந்த அறைக்குச் சென்றான் ரிஷிவர்மன். அவன் செல்லும் நேரம், ஸ்னேகா இருந்த அறையைச் சுத்தப்படுத்தி விட்டு உள்ளே இருந்து வெளியே வந்தான் ஒரு ஹவுஸ் கீப்பர்.


அவனை பார்த்து நெற்றிச் சுருக்கி யோசனையுடன் பார்த்தவன், "இந்த ரூம்ல தங்கி இருந்தவங்க?" என்று கேள்வியாக நிறுத்த,


"அவங்க அப்பவே வெக்கேட் பண்ணிட்டுப் போய்ட்டாங்க" என்று கூறிச் சென்று விட்டான் ஹவுஸ் கீப்பர்.


"என்ன?! காலி பண்ணிட்டுப் போய்ட்டாளா?" என்று ரிஷிவர்மன் தனக்குத்தானே கேட்டுக் கொண்டிருக்க, அதே நேரம், சென்னை செல்லும் விமானத்தில், ஜன்னலோர இருக்கையில் கண்களை மூடிச் சாய்ந்து அமர்ந்திருந்தாள் ஸ்னேகா. மூடி இருந்த அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.


*********


"என்னங்க.. வார ஞாயிற்று கிழமை தனுவைப் பொண்ணு பார்க்க வர்றதா சம்மந்திக்கு போன் பண்ணிச் சொல்லிட்டேன். அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க. மேகாவும், அவ மாப்பிள்ளையும் ஊட்டியில இருந்து கிளம்பியாச்சு. நைட் வந்துருவாங்க. ஓவிக்கும் போன் பண்ணிட்டேன். அவ காலையிலேயே வந்துறேன்னு சொல்லிட்டா.. அப்புறம்.." என்று கணவனிடம் மகனின் திருமண விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது, "மோஹிமா.." என்று அழைத்தவாறு வீட்டின் உள்ளே கையில் சூட்கேஸுடன் வந்து கொண்டிருந்தாள் ஸ்னேகா.


இவ்வளவு காலையில், அதுவும் கையில் சூட்கேஸுடன் மகள் வந்திருப்பதைப் பார்த்த மோகனா, "ஸ்னேகா.." என்று ஒன்றும் புரியாமல் மகளைப் பார்க்க, கார்த்திக்கும் கேள்வியாகத் தன் மகளைப் பார்த்திருந்தான்.


அப்பொழுது அலுவலகம் செல்ல கிளம்பி வந்த விக்ராந்த் தங்கையைப் பார்த்ததும், "குட்டிமா! கான்ஃபரன்ஸ் எப்படிப் போச்சு?" என்று கேட்டபடி அவளின் அருகே வர,


"ம்ம்ம்.. நல்லா இருந்ததுண்ணா.." என்றவள், "நீங்க ஏன் வரல?" என்று தன் அண்ணனிடம் கேட்டாள் ஸ்னேகா.


"வேலை விஷயமா ஹைத்ராபாத்க்கு போனேன்ல, அங்கே மாட்டிக்கிட்டேன்டா. டெல்லிக்கு வர்றதுக்கு எவ்வளவோ ட்ரை பண்ணினேன், முடியல. நானும் நேத்து நைட் தான் வீட்டுக்கு வந்தேன்.." என்றவன்,


"ஆமா, நீ என்ன சூட்கேஸும் கையுமா வந்துருக்க? ஓவிமா வீட்டுக்குப் போகாம ஏர்போர்ட்ல இருந்து நேரா இங்க வந்துட்டியா என்ன?" என்று கேட்டான் விக்ராந்த்.


மோகனாவும், கார்த்திக்கும் அதே கேள்வியைக் கண்களில் தேக்கி மகளைப் பார்த்துக் கொண்டிருக்க..


அவளோ, "ஆமாண்ணா, சண்டே உனக்கு பொண்ணு பார்க்கப் போறோம்ல, அதான் இப்பவே வந்துட்டேன். அப்படியே உன் கல்யாணம் முடியற வரைக்கும் இங்க இருக்கலாம்னு நினைச்சு இருக்கேன். இங்க இருந்தே ஆபிசுக்குப் போகப் போறேன். மாமாக்கும், ஓவிமாக்கும் போன் பண்ணிச் சொல்லிட்டேன்.." என்றவள் தாயைப் பார்த்து, "பாட்டி எங்க மோஹிம்மா?" என்று கேட்டாள்.


மோகனாவோ, "உங்க அத்தை வீட்டுக்குத்தான் போயிருக்காங்க.." என்று கூறவும், 


"சரிம்மா.. எனக்கு டயர்டா இருக்கு.. நான் ரூமுக்கு போறேன்.." என்றவள், அவர்கள் தன்னிடம் வேறு ஏதும் கேட்கும் முன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.


மகள் செல்லவும், "என்னங்க.. ஸ்னேகாவைக் கவனிச்சிங்களா? அவ முகமே சரி இல்ல. இந்த மூணு மாசத்துல எத்தனையோ தடவை இங்க வந்து ஒரு வாரம் தங்கிட்டுப் போயேன்னு சொன்னா, மாட்டேன்னு மறுத்தவ, இப்ப என்னன்னா சூட்கேசோட வந்து நிக்கிறா. எனக்கு என்னவோ சரியா படலங்க. அவ எதையோ நம்மகிட்ட மறைக்கிற மாதிரி இருக்கு. நான் போய் என்னன்னு அவகிட்ட கேட்டுட்டு வரேன்.." என்று எழ போன மனைவியை அமர சொன்ன கார்த்திக்கிற்கும் அதே எண்ணம்தான்! ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,


"மோகனா! எனக்கு ஒன்னும் அப்படித் தெரியல. அவ எப்பவும் போலத்தான் இருக்கா. ரவிகிட்டயும், ஓவிகிட்டயும் சொல்லிட்டுத்தானே வந்துருக்கா? சோ ஒன்னும் பிரச்சனை இருக்காது" என்று கூறவும்,


தந்தையின் பேச்சை ஆமோதித்தவன், "ஆமா மோஹிமா, அவ நார்மலா தான் இருக்கா. நீங்க டென்ஷன் ஆகாதீங்க. நாமெல்லாம் இருக்கும் போது ஸ்னேகாக்கு அப்படி என்ன பிரச்சனை வந்துட போகுது?" என்றவன், "அவளுக்குச் சாப்பிட ஏதாவது கொடுங்க, அவ ரெஸ்ட் எடுக்கட்டும்.." என்று விட்டு அலுவலகம் கிளம்பிச் சென்றான் விக்ராந்த்.


இங்கு அறைக்கு வந்த ஸ்னேகாவோ, கதவை தாளிட்டுக் கொண்டு கண்களை மூடி கதவின் மீது சாய்ந்து நின்றாள். மூடிய கண்களுக்குள் நேற்று நடந்த அனைத்தும் படமாக விரிந்தது. 


அதிகாலையில் சீக்கிரமே விழிப்பு வந்து விட்டது ஸ்னேகாவிற்கு. கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தவள், ஒருநொடி தான் எங்கிருக்கிறோம் என்று அவளுக்குப் புரியவில்லை. புரிந்த போதோ, வேகமாகத தன் அருகில் கவிழ்ந்து படுத்திருந்த கணவனின் முதுகை வெறித்துப் பார்த்தாள். பின்பு சத்தம் வராமல், ஆங்காங்கே சிதறி கிடந்த தனது உடைகளை எடுத்து அணிந்து கொண்டவள், அந்த அறையில் இருந்து வெளியேறி, தனது அறைக்கு வந்து சேர்ந்தாள்.


உள்ளே வந்தவளுக்கு ஏனோ அழ வேண்டும் போல் இருந்தது. அதே சமயம், கணவன் தன்னைத் தேடி வரும் முன் இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்பதால், அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். அவளது மனமோ, 'அவன் வருவானா?' என்று கேள்வி எழுப்பியது. அதற்கு 'நிச்சயம் வருவான்..' என்ற பதிலை கொடுத்த ஸ்னேகாவின் உடல் இறுகியது. அதன் பிறகு வேக வேகமாகத் தனது மொபைலில் இருந்து சென்னைக்கு செல்வதற்கு பயணச் சீட்டை பதிவு செய்தவள், அடுத்தச் சில நிமிடங்களில் அந்த ஹோட்டலை விட்டுக் கிளம்பி இருந்தாள். முயன்று அந்த நிகழ்வுகளில் இருந்து வெளியே வந்தவள், குளியல் அறைக்குச் சென்றாள். 


தன் உடைகளைக் களைந்து ஷவருக்கடியில் நின்றவளின் மேனியில் ஜில்லென்று நீர் துளிகள் பட்டதும், கணவனின் மோகத்தால் அவள் உடலில் ஏற்பட்ட காயங்கள் எரிச்சலில் காந்தியது. அந்தக் காயத்திற்குக் காரணமான கணவனின் வன்மையான ஆக்ரமிப்பும் சேர்ந்தே நினைவுக்கு வர, அவளால் முழுமையாகச் சந்தோஷப்பட முடியவில்லை. மாறாக, 'எதையும் நினைக்காதே மனமே!' என்று தன் மனதை அடக்கிக் கொண்டிருந்தாள்.


அவள் எவ்வளவு அதட்டியும் கணவனைத் தேடி ஓடும் மனதை, அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. எவ்வளவு நேரம் நீரில் நின்றாளோ?


"ஸ்னேகா! எவ்ளோ நேரம்தான் குளிப்ப? சீக்கிரம் வெளிய வா! வந்து சாப்பிடு!" என்ற அன்னையின் அழைப்பில் தன்னிலைக்கு மீண்டவள், ஷவரை நிறுத்தி விட்டு உடையை உடுத்திக் கொண்டு, தலையைத் துவட்டியபடி வெளியே வந்து கதவைத் திறந்தவள், உணவு உண்ணச் சென்றாள். 


அன்று இரவு மேகாவும் தன் கணவனுடன் வீட்டுக்கு வந்து விட, வீடு கலகலப்பானது. இரண்டு நாட்கள் கழித்து அலுவலகத்திற்குச் செல்ல கிளம்பினாள் ஸ்னேகா. விக்ராந்த்தோ, "குட்டிமா! உன் ஸ்கூட்டி ஓவிமா வீட்ல தானே இருக்கு? சோ உன்னை ஆபிஸ்ல டிராப் பண்றேன், வா.." என்று தங்கையை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.


ஸ்னேகாவை அலுவலக வாசலில் இறக்கி விட்டு, "ஈவினிங் நானே வந்து உன்னைக் கூட்டிட்டுப் போறேன்டா.." என்று விட்டு அவன் செல்ல, ஸ்னேகாவோ அலுவலகத்தின் உள்ளே நுழைந்தவள், நேரே வந்து நின்றது, பத்ரியின் கேபினுக்குத்தான்..


கணினியில் கண் பதித்து இருந்த பத்ரி கதவு திறக்கும் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவன், கேபின் வாசலில் நின்றிருந்த ஸ்னேகாவைப் பார்த்ததும், "ஸ்னேகா!" என்று வேகமாக எழுந்து நின்றவன், அதே வேகத்தில் அவள் முன் வந்து நின்றான்.


தன் அருகில் வந்து நின்றவனை எரித்து விடும் பார்வை பார்த்தவள், அடுத்த நொடி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தாள்.


இதை எதிர்பார்த்தது போல் தன் கண்களை பத்ரி மூடித் திறந்தவன், "ஸ்னேகா! நான்.." என்று மேற்கொண்டு பேச வந்தவனின் முன் தனது வலது கையை நீட்டி, போதும் என்பது போல் தடுத்த ஸ்னேகா, 


"மூச்! பேசாதே! என் பேரை சொல்ல கூட உனக்கு அருகதை இல்ல. உன் மேல எவ்வளவு மரியாதை வச்சி இருந்தேன் தெரியுமா? ஆனா நீ இவ்வளவு கீழ்த்தரமா நடந்துப்பேன்னு நினைச்சு கூடப் பார்க்கல.." என்று வெறுப்புடன் வார்த்தைகளைக் கொட்ட, பத்ரியோ அவளது கோபத்தைத் தாங்கி அமைதியாக நின்றான். 


"என்ன? புருஷனை விட்டுப் பிரிஞ்சு தானே இருக்கா.. சோ இவகிட்ட ரூட்டு போடலாம்னு பார்த்தியா? தொலைச்சுடுவேன்! உன் எண்ணம் என்னைக்கும் பலிக்காது! மைன்ட் இட்!" என்று கடுமையாக எச்சரித்து விட்டுத் தனது இடத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.


அவளால் இன்னமும் பத்ரி பார்ட்டியில் வைத்துத் தன்னிடம் நடந்து கொண்டதை ஜீரணிக்கவே முடியவில்லை! அதனால் தான் கோபத்தில் அவனை அறைந்து விட்டாள். பின்பு ஒருவாறு தன்னைச் சமாளித்துக் கொண்டவள், தன் கவனத்தை வேலையில் திசை திருப்பினாள். சிறிது நேரம் கழித்து ரவிவர்மனிடம் கையெழுத்து வாங்கி வருதற்காக ஒரு பைலை எடுத்துக் கொண்டு, எப்பொழுதும் போல் கேபின் கதவைத் தட்டி விட்டு உள்ளே சென்றவள், 


"மாமா! இந்த பைல்ல உங்க கையெழுத்து வேணும். சீக்கிரம் நீங்க போட்டுத் தந்தீங்கன்னா நான் பிரிண்ட் எடுத்து மெயில் பண்ணிடுவேன்.." என்றபடி பைலை அங்கிருந்த டேபிளில் வைத்து விட்டு நிமிர்ந்த ஸ்னேகாவின் கண்களோ அதிர்ச்சியில் விரிந்தது!


*****

No comments:

Post a Comment