ஸ்வரம் 45

 



ஸ்வரம் 45


சில மாதங்களுக்கு முன்,

தங்கையின் வாயிலாக நேகாவுக்கு அவளது அத்தை மகனுடன் திருமணம் என்று அறிந்து கொண்ட அஜித்குமாருக்கு, யார் அவன் என்று தெரியாமல் இருந்தது. மேகாவின் திருமணத்தின் போது தான், அவளது அத்தை மகன் ரிஷிவர்மன் என்றும், அவனுடன் தான் திருமணம் என்றும் தெரிந்து கொண்டான். 


என்ன செய்தாவது தன்னவளைத் தனக்குச் சொந்தமாக்க வேண்டும் என்று பலவாறு யோசித்துக் கொண்டு இருந்த அஜித்குமார் முதலில் ரிஷிவர்மனிடம் பேச நினைத்து, அடுத்த நாளே பெங்களூருக்குப் புறப்பட்டு இருந்தான். 


பெங்களூரில் ரிஷிவர்மனின் அலுவலகத்தில் நுழைந்து, அவனைக் காண வேண்டும் என்று ரிசப்ஷனிஸ்டிடம் அஜித் கூற, சிறிது நேரத்தில் ரிஷிவர்மனே வாசலுக்கு வந்து அஜித்தை வரவேற்றான்.


"ஹலோ ஏ.கே! எப்படி இருக்கீங்க?" என்று உற்சாகமாக வந்து அஜித்தை அணைத்துக் கொண்டான்.


"நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கே? பிஸ்னெஸ் எல்லாம் எப்படிப் போகுது?" என்று அஜீத்தும் தன் பங்கிருக்கு நலம் விசாரிக்க,


"நல்லா இருக்கேன்… வாங்க கேபினுக்கு போய் பேசலாம் ஏ.கே.." என்று அஜித்தை அழைத்துச் சென்றான் ரிஷிவர்மன்.


உள்ளே வந்ததும் அங்கிருந்த சோபாவில் அமர சொன்னவன், தானும் அவன் அருகில் அமர்ந்து, "சொல்லுங்க ஏ.கே, என்ன சாப்பிடுறீங்க, காபி ஆர் கோல்டு ட்ரிங்?" என்று கேட்டான் ரிஷிவர்மன்.


அவனுக்கு வெகு வருடங்கள் கழித்து அஜித்தைப் பார்த்ததும் அவ்வளவு சந்தோஷம்! ஊட்டியில் ஹாஸ்டலில் அவன் தனித்து இருக்கும் போதெல்லாம், ரிஷிக்கு ஆறுதலாக இருந்தது, இந்த ஏ.கே தானே? அதனால் தான் எப்பொழுதும் அஜித்தின் மீது அளவு கடந்த மரியாதை வைத்து இருந்தான் ரிஷிவர்மன்.


"எனக்கு ஒன்னும் வேண்டாம் ரிஷி. இந்தப் பக்கம் ஒரு வேலை விஷயமா வந்தேன். முன்ன ஒருநாள் நீ பெங்களூர்ல இருக்கிறதா சொன்னியா? சரி, அப்படியே உன்னையும் பார்த்துட்டுப் போலாம்ன்னு வந்தேன்.." என்றவன்,


"ஆமா, எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போறே?" என்று எதுவும் தெரியாதது போல் கேட்டான் அஜித்குமார்.


கல்யாணம் என்றதும் முகம் இறுக, "இன்னும் ஒரு மாசத்தில் ஏ.கே.." என்றான் ரிஷிவர்மன்.


அதை உணர்ந்து, "ரிஷி! என்னாச்சு உனக்கு? இந்தக் கல்யாணத்தில விருப்பம் இல்லையா?" என்று கேட்டு அவனை ஆழம் பார்த்தான் அஜித்குமார்.


"ம்பச்! அதை விடுங்க ஏ.கே.. விருப்பம்னு சொல்றதை விட, என்னை ஒதுக்கி வச்சவங்களுக்கு நான் பாடம் கற்பிக்கப் போறேன்.." என்று கூறவும்,

அஜித்தோ யோசனையுடன், “யூ மீன்..." என்றான்.


ரிஷியோ, "ஐ மீன் இந்தக் கல்யாணம் நடக்கலாம், நடக்காமலும் போகலாம்" என்று பொடி வைத்துப் பேசினான்.


ரிஷிவர்மன் என்ன சொல்ல வருகிறான் என்று அஜித்துக்கு புரிந்தது. சிறுவயதில் குடும்பத்தைப் பிரிந்து கஷ்டப்பட்ட ரிஷிவர்மனின் மனம் பற்றி அவன் நன்கு அறிவான். 


ஒருவேளை நேகாவை அவன் திருமணம் செய்வது மூலம் ரிஷி மீண்டும் அவன் குடும்பத்தினருடன் இணைந்தால், முதலில் சந்தோசப்படுவது அவனாகத்தான் இருப்பான். ஆனால் அவன் தன்னவளை அல்லவா திருமணம் செய்ய இருக்கிறான்? அதே நேரம் அவன் செய்ய நினைக்கும் காரியம் அஜித்துக்கு சரியாகப் படவில்லை என்பதால், 


"ரிஷி! பாடம் கற்பிக்க, பழி வாங்க இது சினிமா படம் இல்ல வாழ்க்கை. அதனால இப்படிப் பழிவாங்குறேன்னு யோசிக்காம, உன் வாழ்க்கையை எப்படி வளமாக்கணும்னு அந்த வழியில யோசி.." என்று அறிவுரை கூறி விட்டு, மேற்கொண்டு சில விஷயங்களைப் பேசி விட்டு, அங்கிருந்து கிளம்பினான் அஜித்குமார்.


இரண்டு நாள் கழிந்து இருக்கும். தன்னவளிடம் எப்படித் தன் மனதை வெளிப்படுத்துவது என்று அவன் நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தவன் முன், தனது வேலையை விடப் போவதாக வந்து நின்றாள் நேகா. 


இதற்கு மேலும் காலதாமதம் ஆக கூடாது! அதே நேரம் தன்னவளைச் சபையினர் முன் அவமானப்படவும் விடக் கூடாது என்று நினைத்தவன், ஓர் முடிவுடன் நேகாவை சிறையெடுக்க முடிவு செய்தான் அஜித்குமார். நேகா அறியாமல் சில விஷயங்களைச் செய்து விட்டே அவளை வேலையில் இருந்து அனுப்பியும் வைத்தான்.. 


ஒருவாரம் கழித்து, "அண்ணா! ஒரு ஹெல்ப்.." என்று வந்து நின்றாள் தனுஷா.


நேகாவை பற்றிய தனது யோசனையைச் சற்றுத் தள்ளி வைத்தவன், "என்னடா?" என்று தங்கையிடம் கேட்க,


"அண்ணா! என் பிரென்ட் அமலா இருக்கால, அவளுக்குக் கல்யாணம்.. அதுக்கு நானும், நேகாவும் அவ ஊருக்குப் போறோம். நாளைக்கு எங்களுக்கு கார் வேணும்.." என்று கேட்டாள் தனுஷா.


"காரா? ரெண்டு பேரும் தனியாவா போறீங்க?" என்று அவன் கேட்க,


"ஆமாண்ணா.. ப்ளீஸ்! கார் வேனும்ண்ணா.." என்று சிணுங்கியவளைச் சிரிப்புடன் பார்த்த அஜித்குமார்,


"சரி, என்னோட கார் எடுத்துட்டுப் போங்க.. ட்ரைவர் அரேஞ்ச் பண்றேன்.." என்று சொல்லவும், "அண்ணான்னா அண்ணா தான்!" என்று அவனது கன்னத்தைப் பிடித்து ஆட்டி விட்டுச் செல்ல, அஜித்தோ யோசனையானான்


மறுநாள் தோழியின் ஊருக்குச் செல்வதற்காக காலையில் கிளம்பி ஹாலில் அமர்ந்து நேகாவின் வரவுக்காகக் காத்திருந்தாள் தனுஷா.


"தனு! கிளம்பிட்டியா? ரெண்டு பேரும் பத்திரமா போய்ட்டு வரணும்.." என்றவாறு அங்கு வந்த லட்சுமி, "நேகா இன்னும் வரலையா?" என்று கேட்டார். 


"இன்னும் இல்லமா.. போன் பண்ணினேன், இப்ப வந்துடுறேன்னு சொன்னா.." என்று தனு சொல்லிக் கொண்டு இருக்கும் போது அங்கு வந்தான் அஜித்குமார்.


"அண்ணா! ஆபிஸ் கிளம்பிட்டியா?" என்று தனு கேட்க,


"இல்ல, நானும் உங்க கூடத்தான் வரேன்.." என்றான் அஜித்.


"எங்க கூடவா?" என்று தன் அண்ணனைக் கண்கள் விரிய ஆச்சரியமாக தனு பார்க்க,


"என்ன அஜித்து.. நீயும் இவங்க கூடப் போறியா என்ன?" என்று மகனைப் புரியாமல் லட்சுமி பார்க்க,


"ஆமாம்மா, எனக்கும் அந்தப் பக்கம் ஒரு சின்ன வேலை இருக்கு. அதான் நானே ரெண்டு பேரையும் கூட்டிட்டுப் போறேன்.." என்று கூறவும்,


"அப்போ சரிப்பா.. நீயே கூட்டிட்டுப் போய்ட்டு கூட்டிட்டு வா! அவ்ளோ தூரம் தனியா போறாங்களேனு கவலையா தான் இருந்தேன். சொன்னா உன் தங்கச்சி கேட்பாளா?" என்றுவிட்டு அவர் செல்ல, 


தனுஷாவோ அன்னை சென்று விட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு அஜித்தின் அருகே வந்தவள், "அண்ணா! நிஜமா நீ எங்க கூட வரியா?" என்று கேட்க,


"ம்ம்ம்.. வரேன்.." என்றவன் சோபாவில் அமர்ந்து தனது மொபைலை நோண்ட ஆரம்பித்தான்.


அவளுக்கோ நொடியில் ஒரு யோசனை தோன்றியது. அதைச் செயல்படுத்த மாடிப்படி ஏறினாள். அதைக் கவனித்த அஜித், "தனு! எங்கே போறே?" என்று கேட்க..


"அமலாக்கு வாங்கி வச்ச கிப்ட் எடுக்க மறந்துட்டேண்ணா. அதான் எடுக்கப் போறேன்.." என்றவள், அண்ணனின் பதிலுக்குக் காத்திராமல் படியேற, அஜித்தோ மொபைலில் இருந்து தனது பார்வையை விலக்கித் தன்னவளின் வருகைக்காகக் காத்திருந்தான்.


சில நொடிகளே கடந்து இருக்கும். "ஐயோ அம்மா! அண்ணா.." என்ற தனுஷாவின் அலறல் சத்தத்தில், "தனு! என்னாச்சு?" என்று பதறியபடி தங்கையைக் காண ஓடினான் அஜித்குமார்.


அதே நேரம், தனது அண்ணனின் காரில் வந்து இறங்கினாள் நேகா. 


"பாய் ப்ரோ! பத்திரமா வீட்டுக்குப் போ, போய்ட்டு எனக்கு போன் பண்ணு என்ன.." என்று கூறிவிட்டு இறங்கப் போன தங்கையின் காதை பிடித்து திருகிய விக்ராந்த், 


"நான் சொல்ல வேண்டியதை நீ சொல்றியா? உன்னை.." என்று அவன் முறைக்க,


"எப்படா சாக்குன்னு என் காதை பிச்சு எடுக்க காத்திருப்பியா நீ?" என்று அவனுக்கும் மேல் அவனை முறைத்தாள்.


அவனோ, "கவனமா போய்ட்டு வா நேகா. எதுனாலும் எனக்கு போன் பண்ணு.." என்று தங்கையிடம் கூறி விட்டுக் கிளம்பி இருந்தான் விக்ராந்த்.


அண்ணனின் கார் கண்ணை விட்டு மறையும் வரை அங்கேயே நின்றிருந்த நேகா திரும்பிப் பார்க்கவும், அஜித்தின் வாகனம் அங்கே ஒய்யாரமாக நின்றிருப்பதைக் கண்டாள். அதைப் பார்த்ததும், "இந்தச் சிடுமூஞ்சி இன்னும் ஆபிஸ் போகலையா? கொஞ்ச நேரம் கழிச்சே வந்து இருக்கலாமோ?" என்று யோசித்தபடி வீட்டின் உள்ளே சென்று, "ஆன்ட்டி! தனு.." என்று மெதுவாகச் சத்தம் கொடுத்துப் பார்த்தாள். ஆனால் பதில் சொல்லத்தான் அங்கு யாரும் இல்லை.


"என்னடா இது? யாரையும் காணோம். வீட்டை திறந்து போட்டுட்டு எல்லோரும் எங்க போனாங்க?" என்று அவள் யோசித்துக் கொண்டு இருக்கும் போது, "அம்மா வலிக்கிது.." என்ற தனுஷாவின் குரலில், "தனுக்கு என்னாச்சு?" என்று பதட்டத்துடன் ஓடினாள் நேகா.


மாடியில் தனுஷாவின் அறையில், கட்டிலில் தனது வலது காலின் பாதத்தை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு அவள் அழுது கொண்டிருக்க, தங்கையின் அருகே அமர்ந்து, "தனு! வா, ஹாஸ்பிட்டல் போகலாம்டா.." என்று அழைத்துக் கொண்டிருந்தான் அஜித்குமார்.


வேகமாக தோழியின் அருகே சென்ற நேகா, "தனு! என்னாச்சுடி? எதுக்கு காலை பிடிச்சுட்டு அழுதுட்டு இருக்கே?" என்று கவலையுடன் கேட்க..


அவளோ "கால் சுளுக்கிடுச்சுடி.." என்று வலியில் பல்லைக் கடித்துக் கொண்டு கூறவும்,


"என்னது? கால் சுளிக்கிடுச்சா?" என்று கேட்டவள், அங்கு அமர்ந்து அவளையே பார்த்திருந்த அஜித்தை பார்த்தவள், "என்ன சார் பார்த்துட்டு இருக்கீங்க? தூக்குங்க.. இவளை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போலாம்" என்று படபடவென அவனிடம் வெடித்தாள்.


'ஐயோ! காரியத்தைக் கெடுத்துடுவா போலயே..' என்று தனக்குள் புலம்பிய தனுஷா, "ஹாஸ்பிட்டல் எல்லாம் வேணாம்.. அண்ணா ஆயின்மெண்ட் போட்டு விட்டாங்க, ரெஸ்ட் எடுத்தா ரெண்டு நாள்ல சரி ஆகிரும்.." என்று கூறியவள்,


"ஆனா அமலா கல்யாணத்துக்கு வேற போகணும். அதான் என்ன பண்றதுன்னு தெரியல.." என்று கவலையுடன் கூறினாள் தனுஷா.


"லூசு! உன்னால தான் நடக்க முடியாதுல, பின்ன எப்படிப் போக முடியும்? ஒன்னும் வேணாம்! இதான் விஷயம்னு சொன்னா அமலா புரிஞ்சிப்பா.." என்று நேகா யோசனை கூற,


"இல்லடி, அது சரி வராது. அவளுக்கு பிரெண்ட்ன்னா அது நாம மட்டும் தான். இப்ப என்ன என்னால நடக்க முடியாது. ஆனா நீ போகலாம் தானே?" என்றாள் தனுஷா.


"என்ன விளையாடுறியா? நீ இல்லாம நான் மட்டும் தனியா போகணுமா? என்னால முடியாது.." என்று அவளை நேகா முறைக்க,


"உன்னை யாருடி தனியா போகச் சொன்னது? எங்க அண்ணா அங்கே ஒரு வேலையா போறாங்க. அவங்க உன்னை அமலா ஊர்ல டிராப் பண்ணிடுவாங்க.." என்று கூறி முடிக்கவில்லை! "நான் வீட்டுக்குக் கிளம்புறேன்டி" என்றாள் நேகா.


அஜித் 'தங்கையும், தன்னவளும்' பேசுவதைக் கைகளைக் கட்டியபடி பார்த்துக் கொண்டு நின்றிருந்தானே தவிர எதுவும் பேசவில்லை


"நேகா! இப்ப எதுக்கு வீட்டுக்குப் போறேன் சொல்றே?" என்று தனுஷா கோபத்துடன் கேட்க,


"பின்ன என்னடி? உங்க அண்ணனுக்கு என்னைக் கண்டாலே ஆகாது. எப்ப சான்ஸ் கிடைக்கும், கடிச்சு குதறலாம்ன்னு காத்துகிட்டு இருப்பாரு. அவர் கூட என்னைப் போகச் சொல்றே. இதுக்கு எங்க அண்ணனையே என்னை கூட்டிட்டுப் போகச் சொல்லுவேனே?" என்று தோழியின் காதில் அஜித்திற்கு கேட்காதவாறு கிசுகிசுக்க,


"இதான் உன் பிரச்சினையா? நீ அமலா ஊருக்குப் போய் இறங்குற வரைக்கும், எங்க அண்ணா ஒரு வார்த்தை உன்கிட்ட பேச மாட்டார்.. போதுமா?" என்று உத்தரவாதம் கொடுத்தாள்.


அவளை மேலும் கீழும் பார்த்த நேகா, "ஆமா, உனக்கு கால் வலிக்கலையா? சாதாரணமா பேசிட்டு இருக்கே?" என்று நேகா தன் தோழியைச் சந்தேகமாகப் பார்த்தாள்.


சட்டென்று தன் காலை பிடித்து கொண்ட தனுஷா, "அடியே! என் வலியை பொறுத்துக்கிட்டு உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்.." என்று முகத்தைச் சுருக்கி கூற..


தோழியை நம்பிய நேகா, "சரி! ஆனாலும் உன் அண்ணன் கூட போயே ஆகணுமா?" என்று மெதுவாகத் தயங்கியபடி கூறினாள்.


இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அஜித், "தனு! உன் பிரெண்ட்க்கு என் மேல் நம்பிக்கை இருந்தா என் கூட வரச் சொல்லு! இல்லையா.. நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்துட்டுப் போறேன்.." என்று இறுக்கத்துடன் கூறி விட்டு நின்றான்.


தனுஷாவோ இன்னும் இன்னும் பேசி தோழியின் மனதை கரைத்தவள், "இந்தா சாக்லேட் பாக்ஸ்! உனக்காக தான் வாங்கி வச்சிருந்தேன். இதை எடுக்க வந்தப்போ தான் எனக்கு கால் சுளுக்கிடுச்சி. இதை நீ சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள அமலா ஊர் வந்துரும். ரெண்டு நாள் எஞ்சாய் பண்ணு! அப்புறம் அண்ணா வந்து உன்னை பிக்கப் பண்ணி இங்க கூட்டிட்டு வந்துருவாங்க.." என்று கூறி சம்மதிக்க வைத்தாள்.


நேகாவுக்கு அஜித்துடன் செல்ல மனம் இல்லை என்றாலும், தனுஷாவின் மீதிருந்த நம்பிக்கை மற்றும் அமலாவின் நட்பு இதெல்லாம் சேர்ந்து, "சரிடி! நான் கிளம்புறேன். நீ ரெஸ்ட் எடு!' என்றுவிட்டு அந்த அறையில் இருந்து வெளியேறினாள்.


அஜித்தோ தங்கையை இமைக்காமல் பார்த்தான். அவளோ, "அண்ணா! சீக்கிரம் கிளம்பு! அவ மனசு மாறிட போறா.." என்று அண்ணனை அவசரப்படுத்த,


அவனோ, "நிஜமாவே உனக்கு கால்ல சுளுக்கா தனு? கிப்ட் பாக்ஸ் எடுக்கத் தானே வந்தே, அப்புறம் எப்படி அது சாக்லேட் பாக்சா மாறிச்சு?" என்று கேட்டான்.


அண்ணனைப் பார்த்துக் கண் சிமிட்டிய தனுஷா, "ம்பச்.. அதெல்லாம் ஒன்னும் இல்ல, சும்மா நடிச்சேன். நீயும் வரேன்னு சொல்லவும் தான் எனக்கு இந்த ஐடியா தோணுச்சு. அண்ணா! இது உனக்கு ஒரு சான்ஸ். அமலா ஊருக்குப் போக குறைஞ்சது ஏழு எட்டு மணி நேரம் ஆகும். நீ என்ன பண்றே, அதுக்குள்ள எப்படியாவது உன் லவ்வை நேகாகிட்ட சொல்றே.. சொல்லிட்டு அவளைத் திரும்ப இங்க கூட்டிட்டு வரும் போது, எனக்கு அண்ணியா தான் கூட்டிட்டு வரணும், ஓகேவா.." என்று சிரிப்புடன் கூற,


அவனோ, "வாலு! இதெல்லாம் தப்புனு உனக்குத் தெரியலையா?" என்று கேட்க,


"நீ லவ்வை தானே சொல்ல போறே.. இதுல என்ன தப்பு இருக்கு? சரி சரி போண்ணா.." என்று அவள் கூறவும்,


அஜித்துக்கும் நேகாவிடம் பேச வேண்டி இருந்ததால், "சரிடா, வரும் போது உன் ஆசைப்படியே நேகா உன் அண்ணியா வருவா" என்று தங்கையின் தலையைப் பிடித்து ஆட்டி விட்டு அங்கிருந்து கிளம்பி இருந்தான்.


அஜித்தின் வாகனம் சீரான வேகத்தில் சாலையில் பயணித்துக் கொண்டிருக்க, பின்னால் அமர்ந்து இருந்த நேகாவோ, தனுஷா கொடுத்த சாக்லேட்களை பிரித்து உண்ண ஆரம்பித்தாள்.


அவளை முன்பக்க கண்ணாடியின் வழியாகப் பார்த்த அஜித்திற்கு சிரிப்புத் தான் வந்தது. சின்னக் குழந்தை போல், உதட்டின் ஓரம் சாக்லேட் வடிய சாப்பிட்டுக் கொண்டு இருந்தவளைப் பார்க்க பார்க்கத் தெவிட்டவில்லை அவனுக்கு..


ஏதோ தோன்ற, சட்டென்று அஜித்தைப் பார்த்தாள் நேகா. அவனோ கர்ம சிரத்தையுடன் வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருக்க, "ம்பச்! செம போர்! இப்படின்னு தெரிஞ்சி இருந்தா எங்க அண்ணா வண்டிலேயே வந்து இருப்பேன். அவன் வண்டில பாட்டெல்லாம் போடுவான். இது ஓட்ட வண்டி.." என வேண்டும் என்றே அவன் காதுபட அவள் முணுமுணுக்க, அடுத்த நொடி,


மானே தேனே கட்டிப்புடி

கட்டிப்புடி

மாமன் தோளை தொட்டுக்கடி

தொட்டுக்கடி


மல்லிக வாசனை

மந்திரம் போடுது

மன்மத ராசனின்

மையலை தேடுது


என்ற பாடல் ஒலிக்க, நேகாவுக்கோ தூக்கி வாரி போட்டது.


நாணல் பூவை போல

உள்ளம் ஆடிடுமே

நானும் நீயும் சேர்ந்தா

இன்பம் கூடிடுமே


கோடை மேகம் போல

உன்னை தேடி வந்தேன்

ஆசை வேகம் மீறும்

சிந்து பாடி வந்தேன்


கண்கள் விரிய அஜித்தையும் பிளேயரையும் மாறி மாறி பார்த்த நேகாவுக்கோ, 'இவன் பாட்டுலாம் கேட்பானா? அதும் இப்படிப் பட்ட பாட்டு!' என்று அவள் நெளிந்து கொண்டிருக்கையில், 


கன்னத்தில் என்னென்ன

செஞ்சி வச்சான்

மம்மதன் அள்ளி வச்சான்

கன்னத்தில் என்னென்ன

செஞ்சி வச்சான்

மம்மதன் அள்ளி வச்சான்


ஆத்தோரம் காத்தாடுது

காத்தோடு பூவாடுது

பூவோடு தேன் பாயுது

தேனோட தேன் சேருது


அஞ்சுது கெஞ்சுது

மிஞ்சுது கொஞ்சிடத்தான்

வா வா வா வா


அதற்கு மேல் தாங்காமல், சட்டென்று முன்பக்கம் தாவி பிளேயரை அணைத்து இருந்தாள் நேகா.


அவளின் செயலில், "என்னாச்சு?" என்று ஒன்றும் தெரியாதவன் போல் அவன் கேட்க,


"இல்ல, பாட்டு வேணாம் சார்.. தலை வலிக்குது.." என்று அவள் கூறவும்,


"ஓகே.." என்று தோளை குலுக்கியவனுக்குச் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.


அதன் பிறகு நிம்மதியாக உணர்ந்த நேகா சிறிது நேரத்தில் தூக்கத்தைத் தழுவி இருந்தாள்.


எவ்வளவு நேரம் தூங்கி இருப்பாளோ? சட்டென்று கண் விழித்தவள், "சார்! திருநெல்வேலி வர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?" என்று கண்ணை கசக்கிக் கொண்டு சுற்றிப் பார்த்தவளுக்குத் திக்கென்று ஆனது. காரணம், அவள் இருந்தது காரில் இல்லை ஏதோ ஒரு அறையில்!


"இது எந்த இடம்?" என்று புரியாமல் கட்டிலில் இருந்து இறங்கிய நேகா, வாசலை நோக்கி நடக்க, அப்பொழுது கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் அஜித்குமார்.


அவனைப் பார்த்ததும் நிம்மதியானவள், "சார், இது எந்த இடம்? இங்க ஏன் வந்திருக்கோம்?" என்று தனது சந்தேகத்தை அவனிடம் கேட்க,


அவனோ, "இது நம்ம கெஸ்ட் ஹவுஸ் தான். நீ நல்லா தூங்கிட்டு இருந்தே, அதான் உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்ன்னு நான் தான் உன்னைத் தூக்கிட்டு வந்தேன்.." என்று அவன் சாதாரணமாகக் கூற,


"என்ன? இவர் தூக்கிட்டு வந்தாரா?" என்று அதிர்ந்தாலும் அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல், "சார்! எதுக்கு என்னை உங்க கெஸ்ட் ஹவுஸ்க்கு கூட்டிட்டு வந்தீங்க?" என்று அவனிடம் கோபமாகக் கேட்டாள் நேகா.


ஒரு பெருமூச்சை வெளியிட்ட அஜித், "எனக்கு உன்கிட்ட பேசணும் நேகா.. அதான்.." என்றான் தன்மையாக.


எப்பொழுதும் அதிகாரமாக ஒலிக்கும் அஜித்தின் குரலில் இருந்த கனிவை உணராமல், "பேசணுமா? என்ன பேசணும்? எதுவா இருந்தாலும் அதை கார்ல வச்சி கூடப் பேசியிருக்கலாமே?" என்று பதட்டத்துடன் கேட்ட நேகா, கதவை திறக்க முயல, அதுவோ பூட்டி இருந்தது.


"சாவி என்கிட்ட இருக்கு" என்ற அஜித்தின் குரலில் அவள் அவனை அதிர்ந்து பார்க்க,


அவனோ அடி மேல் அடி எடுத்து வைத்து அவள் அருகில் வந்து நின்றான். ஏனோ நேகாவின் மனதில் கிலி பிடித்தது. ஏதோ தவறாக நடக்கப் போகிறது என்று அவள் உள்மனம் எச்சரிக்கை விடுக்க, 


"சார்! கதவை திறங்க, நான் வீட்டுக்குப் போகணும்.." என்றாள் தனது பதட்டத்தை மறைத்துக் கொண்டு.. 


அவளை மேலும் நெருங்கி வந்தவன், "இப்ப எதுக்கு இவ்ளோ டென்ஷன்? ஒன்னும் இல்ல ஜஸ்ட் பேசணும்தானே சொல்றேன்" என்று கூறிக் கொண்டே அவளை நோக்கி இன்னும் ஒரு அடி எடுத்து வைக்க,


"எதுனாலும் அங்க நின்னே பேசுங்க.." என்று அவள் அவனது நடைக்குத் தடை போட்டாள்.


அதற்கு மேல் அவளைக் கலவரப்படுத்தாமல் ஆழந்த மூச்செடுத்து, "நான் உன்னை உயிருக்கு உயிரா விரும்புறேன் நேகா.." என்று தன் காதலைப் பட்டென்று அவளிடம் கூறி விட்டான் அஜித்.


"வாட்?! லவ் பண்றிங்களா?" என்று கண்களை விரித்து அதிர்ந்து கேட்டாள் நேகா.


"எஸ்! அதைச் சொல்லத்தான் நான் உன்ன இங்க கூட்டிட்டு வந்தேன்.." என்று அவன் புன்னகையுடன் சொல்லவும்,


"லூசா சார் நீங்க? என்கிட்ட விளையாட உங்களுக்கு வேற கான்செப்ட்டே கிடைக்கலையா?" என்று அவனை ஏகத்துக்கும் முறைத்துப் பார்த்தாள்.


அவனோ அழுத்தமான குரலில், "இது விளையாட்டு இல்ல நேகா.. உன்னை அஞ்சு வருஷத்துக்கும் மேல லவ் பண்றேன்…" என்று தன் காதலை அவளுக்குப் புரிய வைக்க முயன்றான்.


"ஆர் யு கிரேசி? எனக்குக் கல்யாணம் பிக்ஸ் ஆகிருக்கு சார். இந்த நேரத்தில லவ்வு அது இதுன்னு சொல்லிட்டு இருக்கீங்க.." என்று படபடப்பு குறையாமல் கேட்டாள் நேகா.


"எஸ்! நான் கிரேசி தான்! அதுவும் உன் மேல அப்படிப் பைத்தியமா இருக்கேன். நீ எனக்கு வேணும். என்னைப் புரிஞ்சிக்கோ நேகா.." இவ்வளவு நேரம் பொறுமையாகப் பேசிய அஜித்தின் குரலில் ஒருவித கோபம் தென்பட்டது.


அதை உணர்ந்தாலும், சிறிதும் அலட்டிக் கொள்ளாமல், "ஓகே, இப்ப என்ன நீங்க என்னை லவ் பண்றிங்க.. அதை என்கிட்ட சொல்ல நினைச்சிங்க.. இதோ! சொல்லியும் முடிச்சிட்டீங்க.. நானும் கேட்டுட்டேன், அவ்ளோ தானே? இப்ப கதவை திறக்குறீங்களா?" என்றாள் வரவழைத்துக் கொண்ட தைரியத்துடன்..


அவளின் பேச்சில் கோபமான அஜீத், "நேகா! நான் சொல்றது உனக்குப் புரியுதா புரியலையா? நீ எனக்கானவ.. வா, இப்பவே நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.." என்று அவன் கூற, அதிர்ந்து அவனைப் பார்த்தாள் நேகா.


"சார்! உங்களை நம்பி நான் இவ்ளோ தூரம் வந்து இருக்கேன். அந்த நம்பிக்கையைக் காப்பாத்துங்க.. ப்ளீஸ்! மொதல்ல கதவை திறங்க" என்று அவள் சொன்னதையே சொல்லிக் கொண்டு இருக்க,


தன் பொறுமையை இழந்த அஜித்தோ, சட்டென்று அவள் கையை பிடித்து இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொன்டவன், அவளது முகத்தைத் தன்னை நோக்கி நிமிர்த்தினான். நேகாவோ அவனது இந்த திடீர் செயலில் அவனை மிரட்சியுடன் பார்க்க,


"பேபி! இவ்ளோ தூரம் சொல்றேன், என்னைப் புரிஞ்சிக்க மாட்டியா? ஐ டெரிப்ளி லவ் யு டி.." என்று தன் காதலைத் தனது கண்களின் வழியே அவளுக்குப் புரிய வைக்க முயன்றான்.


ஆனால் அவளோ, தன் பலம் மொத்தத்தையும் திரட்டி வேகமாக அவனைத் தள்ளி விட்டவள், 


"சார்! எனக்கும், என் அத்தை பையனுக்கும் இன்னும் ஒரு மாசத்தில கல்யாணம். உங்களுக்கு ஏற்கனவே பத்திரிக்கை வச்சதா ஞாபகம். எங்க கல்யாணத்துக்கு வந்து அட்சதை தூவி வாழ்த்திட்டு, வயிறு நிறைய சாப்பிட்டுப் போங்க. அதை விட்டுட்டுக் காதல் அது இதுன்னு உளறிட்டு இருக்காதீங்க.." என்று கோபத்தில் கத்த,


அவள் தன் அத்தை மகனுடனான அவளது திருமணத்தைப் பேச பேச, தன்னை விட்டுத் தன்னவள் தூர சென்று விடுவாளோ என்று எண்ணி வெறியான அஜித், "நானும் சொல்லிட்டே இருக்கேன்.. திரும்ப திரும்ப அதையே பேசிக்கிட்டு இருக்கே.." என்று கர்ஜித்தவன், அவளை மீண்டும் இழுத்து இறுக்கி அணைத்துக் கொண்டு அவள் இதழ் நோக்கிக் குனிந்தான்.


"சார்! தப்பு பண்றிங்க.. ப்ளீஸ்! வேணாம்.." என்று முகத்தைத் திருப்பி அவனிடம் இருந்து விடுபட போராடினாள்.


ஆனால் அவனோ வலுக்கட்டாயமாக அவளின் முகத்தை ஒரு கையால் இறுக பற்றிக் கொண்டு, அவளின் இதழில் தனது இதழை அழுத்தமாக பதித்து இருந்தான்.


அவனது முத்தத்தில் துடித்துப் போன நேகாவின் கண்களோ கண்ணீரைப் பொழிய, சிறிது நேரம் கழித்து அவளை விடுவித்தவன், "இப்ப சொல்லு! இன்னும் நீ உன் அத்தை பையனைத்தான் கல்யாணம் பண்ணிப்பியா?" என்று ஆழ்ந்த குரலில் கேட்டான்.


அவளோ அவனை உக்கிரமாக முறைத்துப் பார்த்தவள், "ச்சீ! நீயெல்லாம் ஒரு ஆம்பளையா? ஒரு பொண்ணை அவ விரும்பம் இல்லாம கடத்திட்டு வந்து, இப்படிப் பலவந்தபடுத்துற மாதிரி அசிங்கமா நடந்துக்குறியே? உனக்கு வெக்கமா இல்ல? இதுதான் உன் காதலா? இப்படியெல்லாம் நடந்துகிட்டா உன்னை ஏத்துப்பேன்னு நினைச்சிட்டியா? 


நீ என்ன பண்ணினாலும் சரி, எனக்கு உன்னைப் பிடிக்காது! நான் உன்னை எந்த ஜென்மத்திலும் லவ்வும் பண்ண மாட்டேன், கல்யாணமும் பண்ண மாட்டேன்! எனக்குக் கல்யாணம்ன்னு ஒன்னு நடந்தா, அது.." என்று அவள் மேற்கொண்டு கூறும் முன், மீண்டும் அவளின் இதழை வன்மையாகச் சிறை பிடித்தவன், அப்படியே அவளைத் தன் கைகளில் அள்ளிக் கொண்டான்.


அவன் செயல் புரிந்து பரிதவித்துப் போன நேகா, அவனிடம் இருந்து விடுபட போராட, அதற்குள் அவளைக் கட்டிலில் கிடத்தி சிறிதும் தாமதிக்காமல் அவள் மேல் படர்ந்தவன், சிறிது நேரத்தில் அவளது ஆடைகளைத் திசைக்கொன்றாகப் பறக்க விட்டவன், அவளுக்குத் தானே ஆடையாகிப் போனான். அவளது பேச்சு அவனை மிருகமாக மாற்றியிருந்தது.


இனி அவ்வளவு தான்! தன் வாழ்க்கையே முடிந்து விட்டது என்று கழிவிரகத்தில் துடித்த நேகா, அஜித்தின் நெருக்கத்தை ஏற்க முடியாமல் மூர்ச்சையாகிப் போனாள்.


மறுநாள் காலை மயக்கத்தில் இருந்து கண் விழித்த நேகா, பாரமாக இருந்த தலையைப் பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள். அவள் எதிரே சோபாவில் அவளைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான் அஜித்.


அவனைப் பார்த்ததும், நேற்று அவன் தன்னிடம் நடந்து கொண்டது அனைத்தும் நினைவுக்கு வர, அப்பொழுதுதான் தான் இருந்த நிலை அவளுக்கு உறைத்தது. தன் மீதிருந்து நழுவியிருந்த போர்வையை சட்டென எடுத்து இழுத்து போர்த்திக் கொண்டவளுக்கோ, அழுகையாய் வந்தது. 


தன் வாழ்க்கை ஒரு நொடியில் இப்படித் திசை மாறும் என்று அவள் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. தன்னை நாசமாக்கியவனைக் கொல்லும் அளவுக்கு நேகாவின் கோபம் எல்லையைக் கடந்தது.


அவள் எழுந்ததில் இருந்து நேகாவின் முகத்தில் தோன்றிய அனைத்து பாவனைகளையும் அவதானித்த அஜித்குமார், "கிளம்பலாமா பேபி?" என்றான், எதுவும் நடவாதது போல..


அவனது பேச்சில் பல்லைக் கடித்துத் தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள் நேகா. அவனோ, "என்னைப் பத்தி நேத்தே உனக்கு நல்லா தெரிஞ்சி இருக்கும். இதுக்கு மேலேயும் உங்க அத்தை மகன் ரத்தினத்தை தான் கல்யாணம் பண்ணுவேன்னு அடம்பிடிக்க மாட்டேன்னு நினைக்கிறேன்" என்று இரக்கம் இல்லாமல் கூறிய அஜித்குமார், "சீக்கிரம் ரெடியாகு! சென்னைக்கு கிளம்பணும்.." என்று கூறி விட்டுத் தனது மொபைலை நோண்ட ஆரம்பித்தான்.


அவளோ எதுவும் பேசவில்லை. பேசும் அளவிற்கு மனதிலும், உடலிலும் தெம்பும் இல்லை. தன்னைச் சீரழித்து விட்டால், வேறு வழியில்லாமல் தன்னையேதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற இவனது எண்ணம் மட்டும் நிறைவேற கூடாது என்ற உறுதி எடுத்தவள், அவனைப் பார்க்கப் பிடிக்காமல், அமைதியாகக் குளியல் அறைக்குள் புகுந்து தனது உடைகளை உடுத்திக் கொண்டு கிளம்பி இருந்தாள்.


மீண்டும் கார் பயணம் ரொம்பவே அமைதியாகக் கழிய, சில மணி நேரங்கள் கழித்து நேகாவின் வீட்டு வாசலில் வந்து காரை நிறுத்திய அஜித்குமார், அவள் புறம் திரும்பி, "எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இந்தக் கல்யாணத்தை நிறுத்துற.. இல்ல நான் நிறுத்த வைப்பேன்!" என்று எச்சரித்து விட்டுத்தான் கிளம்பினான்.


ஆனால் வீட்டுக்கு வந்த நேகாவோ, தனக்குள் சுருண்டு போனாள். அவளுக்கு நடந்ததை வீட்டில் சொல்ல ஒரு நொடி போதும்! அதன்பிறகு தன் அண்ணன் கோபத்தில் அஜித்தை ஏதாவது செய்ய கிளம்பி விடுவான். அதே நேரம் ஸ்னேகாவின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகும்.


'அண்ணனின் வாழ்க்கையும், தன் தங்கையின் வாழ்க்கையும் என் ஒருத்தியால் பாதிக்கப் படுவதா?' பலவாறு யோசித்தவள், முடிவாகத் தான் மட்டும் சிலுவையைச் சுமக்க முடிவெடுத்து அமைதியாகி விட்டாள்.


அதே நேரம் திருமண நாள் நெருங்க நெருங்க உள்ளுக்குள் செத்துக் கொண்டிருந்தாள் நேகா. அஜித்தின் செயலால் ரிஷிவர்மனுடனான தனது திருமணத்தை ஏற்க முடியாமல் தவித்தவள், மொத்தமாகத் தனது உயிரைப் போக்கவும் முடிவு செய்தும் இருந்தாள்.


அந்நேரத்தில், அவளுக்கு தினம் தினம் போனில் அழைத்துப் பார்த்த அஜித், இறுதியாக, அவள் மயக்க நிலையில் தன்னுடன் இருப்பது போல் சில புகைப்படங்கள் எடுத்து இருந்ததை அவளுக்கு அனுப்பி இருந்தான். 


அதைப் பார்த்ததும், அஜித்தின் மேல் இன்னும் இன்னும் வெறுப்பு மண்டி போக, பின்பு ஒரு முடிவுடன் அவனையே திருமணம் செய்து, அவன் செய்த தவறுக்குத் தண்டனையாக, அவனைத் தினம் தினம் சித்திரவதை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துத்தான், கடைசி நேரத்தில் ரிஷிவர்மனை மறுத்து அஜித்தைத் திருமணம் செய்து கொண்டாள்.


நடந்த அனைத்தையும் நினைத்துப் பார்த்த அஜித்குமாரின் மனம் வேதனையில் துடித்தது. தான் செய்ய நினைத்த தவறை மனைவி மன்னித்து மனதார ஏற்றுக் கொள்வாளா? என எண்ணியவன், பெருமூச்சு ஒன்றை வெளியிட்டுத் தனது காரை தன் வீட்டு வாசலில் நிறுத்தி இருந்தான்.


சோர்ந்த நடையில் உள்ளே சென்றவனுக்கு வீட்டின் வெறுமை முகத்தில் அறைந்தது. மெதுவாகப் படியேறி தனது அறைக்குள் நுழைய, அங்கே அவன் மனைவி இல்லை. "எங்க போனா?" என்று யோசித்தவனுக்கு இன்று மாலை நடந்தது அனைத்தும் நினைவுக்கு வர, "ஓ! என்னை விட்டுட்டுப் போய்ட்டாளா?" என்று விரக்தியுடன் கூறியபடி தலையில் கை வைத்து அப்படியே அவன் அமர்ந்து விட்டான்.


அப்பொழுது படாரென்று அவர்கள் அறையின் கதவு திறந்தது. இந்நேரத்தில் யார் என்று வேகமாக நிமிர்ந்து பார்த்த அஜித், அங்கே தன் மனைவியைக் கண்டதும், அகமும் முகமும் மலர, "பேபி.." என்று வியப்புடன் அழைக்க,


அவன் அருகில் வந்து நின்ற நேகாவோ, கோபம் பொங்க அவன் முகத்தை உக்கிரமாகப் பார்த்தவள், அடுத்த நொடி, கணவனை ஓங்கி அறைந்து இருந்தாள்.


****


No comments:

Post a Comment